டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0
டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் நவம்பர் 16, 2019 ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான நடன போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1][2] இது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும். முந்தைய பகுதிகளில் நடுவராக இருந்த நடிகை சினேகா இந்த பகுதியிலும் தொடர்கிறார் இவருடன் நடிகைகள் பிரியா ராமன் மற்றும் பூஜா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். புதுமுக தொகுப்பாளினி பேர்லே மானே என்பவர் தொகுப்பாளர் தீபக் தினகர் இணைந்து இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[3] சிறப்பு நடுவர்களாக நமிதா, பிரியாமணி[4], ஓவியா மற்றும் பிரசன்னா சுஜித் ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி 29 பெப்ரவரி 2020 அன்று கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது. விவரம்இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்களுடன் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருக்கும் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நடனமாடி அவர்களின் நடனத் திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.[5] போட்டியாளர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |