எக்ஸ்-மென் 3
எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட் (X-Men: The Last Stand)[3] என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், இங்கெனியஸ் பிலிம் பார்ட்னர்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. லாரன் ஷல்லர் டோனர், அவி ஆராட் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை பிரெட் ரட்னர் என்பவர் இயக்க, ஹியூ ஜேக்மன், ஹாலே பெர்ரி, இயன் மெக்கெல்லன், பாம்கே ஜான்சென், அண்ணா பகுய்ன், கெல்சி கிராமர், ஜேம்ஸ் மார்ஸ்டன், ரெபேக்கா ரோமெயின், சான் ஆஷ்மோர், ஆரோன் ஸ்டான்போர்ட், வின்னி ஜோன்ஸ், டானியா ராமிரெஸ், மைக்கேல் மர்பி ஷோஹ்ரே அக்தாஷ்லூ, பேட்ரிக் ஸ்டீவர்ட் மற்றும் பென் போஸ்டர் போன்ற பலர் நடித்துள்ளார்கள். எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட் படம் மே 26, 2006 அன்று வெளியானது. இது உலகளவில் சுமார் 459 மில்லியனை வசூலித்தது, இது 2006 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாகவும் மற்றும் எக்ஸ்-மென் திரைப்படத் தொடர்களில் அதிக வசூல் செய்த படமும் ஆகும். இந்த திரைப்படத்தின் தொடர்சியாக எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் என்ற படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |